கழுத்துவலி வரக் காரணங்கள் - vistharaya

Breaking

Sunday, July 8, 2018

கழுத்துவலி வரக் காரணங்கள்


செரியாமை, மலச்சிக்கல், வாயுக்கோளாறுகள், குடல் சூடு, அஸ்த சூடு, மூலச்சூடு இவற்றினாலும்,அதீத சிந்தனை, மனஅழுத்தம், தூக்கமின்மை, கோபம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், அதிகமான நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்தல், தொலைக்காட்சி பார்த்தல், போன்றவற்றாலும் இத்தகைய கழுத்துவலி உருவாகிறது.
நேரங்கடந்த உணவு, அளவுக்கதிகமான உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, கோபம், பயம் எரிச்சல் உள்ள போது உண்பது, நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, பித்தத்தை அதிகரிக்கும் உணவுகள், வாயுவை அதிகரிக்கும் உணவுகள் என பலவற்றை உண்பது போன்றவற்றாலும் கழுத்துவலி உண்டாகிறது.
இப்படிப்பட்ட உணவுகளை உண்பதால் குடலில் நீரானது அதிகம் சுரந்து செரியாமை ஏற்படுகிறது. பின் அது மலச்சிக்கலாக மாறுகிறது. இதனால் குடலில் அபான வாயு சீற்றம் கொண்டு குடல் நீரை மேல்நோக்கித் தள்ளுகிறது. இந்த குடல் நீர் ஆவியாகி சிரசை நோக்கி சென்று அங்கே தங்குகிறது. பின்பு தலையின் பின்பகுதி நரம்புகள் வழியாக கீழ் இறங்கி கழுத்துப் பகுதிக்கு வரும்போது அங்கு தசைகளையும் நரம்புகளையும் சுற்றிக் கோர்த்துக் கொள்கிறது. பின்பு அது பசைத் தன்மையடைந்து பந்துபோல் கழுத்து தசை எலும்புகளையும், நரம்புகளையும் இறுகச் செய்கிறது. இதனால் கழுத்துப்பகுதி திரும்ப முடியாமல் போகிறது. மேலும் அங்கு கைகளின் நரம்புகள் ஆரம்பிப்பதால் அவைகளும் தோள் பட்டை பாகங்களும் இறுகி வலியை உண்டாக்குகிறது.
உதாரணமாக கடலில் உள்ள நீரானது அதிக வெப்பத்தால் ஆவியாகி மேல் சென்று மேகமாக மாறி பின் மழை நீராக பொழிவது போல் குடலில் உள்ள நீரும் ஆவியாக மாறி சிரசை அடையும்போது அவை நீராக மாறி கழுத்துப் பகுதிக்கு இறங்குகிறது. இது அவரவர் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்புகளை உண்டுபண்ணுகிறது.
உணவு முறை:
நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது. அல்லது அதிக குளிர்ச்சியூட்டும் உணவுகளை உண்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கலைப் போக்குவதுடன், தினமும் மதிய வேளையில் ஒரு கீரையை சேர்த்து சாப்பிட வேண்டும். இரவில் கீரை, தயிர் இவற்றை தவிர்க்க வேண்டும்.
உணவு முறை:
நேரம் கடந்த உணவு, அதீத உணவு, எளிதில் சீரணமாகாத உணவு, நொறுக்குத்தீனி, மது, போதைப்பொருள், நீண்ட பட்டினி, வாயு பதார்த்தங்கள் உண்பது.

No comments:

Post a Comment