பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தங்களது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
எனினும் ஐசிசி விதிமுறைப்படி, அரசாங்க ஊக்கமருந்து எதிர்ப்பு திணைக்களத்தின் அறிக்கை வரும் வரையில், வீரர் யார்? என்ற விடயத்தை வெளியிட முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த வீரர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தொன்றை பயன்படுத்தியுள்ளமையை கிரிக்கெட் சபை கண்டறிந்துள்ளது. எனினும் எனினும் வீரர் தொடர்பான விபரங்களை இப்போது வெளியிட முடியாது. அரசாங்க ஊக்கமருந்து எதிர்ப்பு திணைக்களத்தின் அறிக்கை வர இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். அதன் பின்னர் வீரர் தொடர்பான மேலதிக விபரங்கள் அறிவிக்கப்படும்” என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
குறித்த வீரர் பாகிஸ்தானின் பைசலாபாத்தில் நடைபெற்ற உள்ளூர் 50 ஓவர் தொடரொன்றின் போது, ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ளார்.
அரசாங்க ஊக்கமருந்து எதிர்ப்பு திணைக்களத்தின் அறிக்கையில் குறித்த வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு சுமார் இரண்டு வருட போட்டித் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு பாகிஸ்தான் வீரர் ரஷா ஹாசன் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 2017ம் ஆண்டுவரை தடைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த காலப்பகுதியில் பாகிஸ்தான் அணியின் யசீர் ஷா மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோரும் 3 மாத தடைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment