சேமியா கேசரி - vistharaya

Breaking

Saturday, January 7, 2017

சேமியா கேசரி


தேவையானவை:
வருத்த சேமியா – 1 கப் (100 கிராம்).
சர்க்கரை – ½ கப் (50 கிராம்).
ஏலக்காய் – 2, கிஸ்மிஸ் – 5 Piece.
கேசரி பவுடர் – தேவையான அளவு.
நெய் – ½ டீஸ்பூன்.
முந்திரி பருப்பு – 10 Piece.
செய்முறை:
முந்திரியை சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
ஏலக்காய்யை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
சேமியாவை சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் (200 கிராம) தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ஒரு கப் ரவைக்கு அதற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் சரியான அளவாக இருக்கும்.
அதில் கேசரி பவுடர் கலருக்கு தேவையான அளவு போடவும்.
தண்ணீர் கொதித்த பிறகு அதில் சேமியாவை போட்டு கிண்டவும்.
அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
சேமியா நன்றாக வெந்தவுடன் அதனுடன் சர்க்கரையைச் சேர்த்துக் கிண்டவும்.
ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியையும், கிஸ்மிஸ்யையும் வறுத்து எடுத்து, கேசரிவுடன் சேர்த்துக் கிண்டவும்.
பத்து நிமிடத்தில் சேமியா கேசரி தயாராகி விடும்.

No comments:

Post a Comment